Saturday, June 7, 2008

நதி

என்பிறந்த ஊர் சென்றிருந்தேன்
ஊறிய நினைவுகள் கிளைக்க

என் தாத்தா நிறுத்தியிருந்தகல்தூண்
அப்படியேயிருக்கிறது இன்றும்,
என் அப்பா நிறுவியிருந்த இரும்பு கேட்

அப்ப்ப்ப்படியே இருக்கிறது,
அவர் தரைமேல் பதித்திருந்த
கற்பலகை கூட அப்படியே இருக்கிறது,

என் முத்தாத்தா கட்டியிருந்த தொழுவம்அப்படியே இருக்கிறத சற்றே இடிபாடுகளுடன்
முந்தைய குடும்பம் எப்போதோ வைத்த

அரசமரமும் வேம்பும் பிள்ளையாரின் பின்புறம்
முயங்கியபடி விசாலித்திருக்கிறது

அவர்கள் யாரும் இல்லையே இப்போது

மனிதர்களைவிட ஜடங்களின் ஜpவிதம் நீண்டதாய் இருக்கிறது
தலைமுறைகள் தாண்டி

காட்சிகள் கண்ணீர் திரையில் தளும்புகின்றன,
தெரிந்தவர்கள் வந்து பேசிக்குலவிநலம் விசாரிக்கிறரர்கள்,

பாரம்பரியமாய் வந்து போகிறீர்கள்
கோவிலுக்கும் திருவிழாவுற்கும்
அப்பா தாத்தா மாதிரியே

அந்தத் தூணருகே நிற்கவைத்து
என்னை நிழற்படம் எடுத்தான் என் கிளை
கிளையா வேரா

அவனை வைத்தொரு படம் எடுத்தேன் நான்

மழை பிடித்துக்கொண்டது திடுமென
மரத்தடியே ஒதுங்கினோம்
வானத்துக்கும் மேலிருந்து கிளம்பி மேகம் கடந்து
மரத்துக்குடைவிரிப்பில் நுழைந்து சொரிந்து
மழைநீர் சிறு அலகாகக் குவிந்து பின் விரிந்து
அடித்துக்கொண்டு சென்றது
எல்லோர் கால்களையும் நனைத்தபடி

No comments: