Saturday, June 7, 2008

நம்புவதென்றhல்

நான் நம்புவதில் உனக்கு நம்பிக்கையில்லை
உன் நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை
உன்னை நானும் என்னை நீயும்
ஒரு நம்பிக்கைக்கு உட்படுத்தாதவரை
நம் நம்பிக்கைகள் பற்றி
நாம் நம்புவதை
யாராவது நம்புவர்
எனநம்புகிறhயா

நதி

என்பிறந்த ஊர் சென்றிருந்தேன்
ஊறிய நினைவுகள் கிளைக்க

என் தாத்தா நிறுத்தியிருந்தகல்தூண்
அப்படியேயிருக்கிறது இன்றும்,
என் அப்பா நிறுவியிருந்த இரும்பு கேட்

அப்ப்ப்ப்படியே இருக்கிறது,
அவர் தரைமேல் பதித்திருந்த
கற்பலகை கூட அப்படியே இருக்கிறது,

என் முத்தாத்தா கட்டியிருந்த தொழுவம்அப்படியே இருக்கிறத சற்றே இடிபாடுகளுடன்
முந்தைய குடும்பம் எப்போதோ வைத்த

அரசமரமும் வேம்பும் பிள்ளையாரின் பின்புறம்
முயங்கியபடி விசாலித்திருக்கிறது

அவர்கள் யாரும் இல்லையே இப்போது

மனிதர்களைவிட ஜடங்களின் ஜpவிதம் நீண்டதாய் இருக்கிறது
தலைமுறைகள் தாண்டி

காட்சிகள் கண்ணீர் திரையில் தளும்புகின்றன,
தெரிந்தவர்கள் வந்து பேசிக்குலவிநலம் விசாரிக்கிறரர்கள்,

பாரம்பரியமாய் வந்து போகிறீர்கள்
கோவிலுக்கும் திருவிழாவுற்கும்
அப்பா தாத்தா மாதிரியே

அந்தத் தூணருகே நிற்கவைத்து
என்னை நிழற்படம் எடுத்தான் என் கிளை
கிளையா வேரா

அவனை வைத்தொரு படம் எடுத்தேன் நான்

மழை பிடித்துக்கொண்டது திடுமென
மரத்தடியே ஒதுங்கினோம்
வானத்துக்கும் மேலிருந்து கிளம்பி மேகம் கடந்து
மரத்துக்குடைவிரிப்பில் நுழைந்து சொரிந்து
மழைநீர் சிறு அலகாகக் குவிந்து பின் விரிந்து
அடித்துக்கொண்டு சென்றது
எல்லோர் கால்களையும் நனைத்தபடி

பிறந்தநாள்

நாட்களைத் தின்று
வருடங்களைவிழுங்கி
காலத்தில் கரைந்துகொண்டிருக்கும்
நான்,
விரும்புவதெல்லாம்
என் வாசம் ஏதாவதொரு வாசத்தை
விட்டுச்செல்ல வேண்டும் என்பதே,
நதியில் விட்டுச்செல்ல அல்ல

நதிக்கு விட்டுச்செல்ல

என் காலடியில் சிலும்பும் இந்த சிற்றலை
என்னதான் சொல்கிறது

பட்டாம்பூச்சி

மஞ்சளில் கறுப்புப் புள்ளி சிதறிய
பட்டாம்பூச்சி,
நுரையீரலை நியாபகப்படுத்தும்படி
கொல்லன் துருத்தியின் சுவாசம்போல

என் பிராயக் கனவில்
பின் நினைவில் நனவில் என்மேல் படிந்த
பட்டாம்பூச்சி

கண்ணில் பட்டது பின் சட்டென
பறந்து வந்து என் நெற்றிமேல் வந்தமர்ந்தது
பின் தாவி காதில் அமாந்தது குறுகுறுத்தது
சிரித்தால் குலுங்கலில் பயந்து பறந்துபோகுமே என
சிரிப்படக்கி குறுகுறுவில் முகிழ்த்தேன்

பிறகு என் தோளில் அமர்ந்தது,
அதன் சிறகசைப்பு கீழக்கன்னத்தில் சிலிர்த்தது
காதலுற்றேன் அதன்மேல், கண்மூடி ரசித்தேன்,

அப்போது
என் கண்இமை மேல் வந்தமர்ந்தது,
கண்ணைத்திறக்கமுடியாதபடி,
கண்இமை நுழைந்து கண் உள் படிந்தது
என் கனவில் தோய்ந்து களிப்பூட்டியது

பரவசம் முடிந்து கண்திறந்தபோது
பறந்துவிட்டிருந்தது,

இப்போது யதேச்சையாய் உணர்ந்தேன்
அதே பட்டாம்பூச்சி
என் கண்ணிலும் காதிலும் கழுத்திலும்
மறுபடி உட்கார்கிறதை
ஆ னா ல்,,,,,,,,,,,,,
என் கண்ணாடிப் பிம்பம்மேல்

மஞ்சளில் கறுப்புப் புள்ளி சிதறிய
பட்டாம்பூச்சி,
நுரையீரலை நியாபகப்படுத்தும்படி
கொல்லன் துருத்தியின் சுவாசம்போல

Thursday, June 5, 2008

டெஸ்ட்ரோ்ஸ்டோன்

அறியாமல் தேடி
தேடிஅலைந்து
தேடலை அறிந்து
தேடிக்களைத்து
அறிந்து களைத்து
அறிந்ததெல்லாம்
அடைந்தபின்னும்
தொடரும் இயக்கும்
நாவைத்தடவும் பூனை

போன்சாய்

உள்ளேயொரு போன்சாய்
எப்போதோ யதேச்சையாய் விழுந்தவை சில

எடுத்து தேர்ந்து விதைத்தவை சில
எதிர்பாராது இறங்கியவை சில
இவை
கால நீரோட்டத்தில் அடித்துக்கொண்டும் போகவில்லை
அழுகியும் போகவில்லை
வளர விரும்பும்போதெலாம்
நுனிவெட்ட வளர்ந்த செடி
தணல்மேல் நீறுபூத்ததாய்
மௌனம் பூசிய இரகசிங்களென
மரம் சாயும், செடி சாகும்
மகரந்தக்களோடு
சூல் மறுத்தவாறே

நிம்மதி

என் பதிலை அறிந்த உன் கேள்விக்கும்
உன் கேள்வியை அறிந்த என் பதிலுக்கும்
இடையேயான நலுங்கும் தளத்தில்மிதக்கும்
அகத்தக்கையின் மேல்அலைக்கழிந்துகொண்டிருக்கிறது
நிம்மதி
யாருக்குமில்லாமல்

ஜன்னல்

ஜன்னலைஅடித்து
மூடியபின்
திறந்துகொள்கிறது
உள்ளேயொன்று
கதவற்று அதன்போக்கில்

பதியாத் தடம்

சிறகுகளிழந்து
வான் நோக்கி கால்தூக்கிகிடக்கும் கிளி
பூனைக் கால்தடம் மறைக்கும்
சலவைத்தரை, அதன்மேல்
சிரித்த முகம் ஏந்திச்செல்லும்
மனிதக்கால்கள்

கணக்கு

முறைவகுத்துக்
கூட்டிப் பின்
பெருக்கி
கழிந்த மீதியோ கணக்கு
வாழ்க்கை