Friday, January 10, 2014

விஷம்

விஷம் 

மரகதப் பாம்புகள்
நீர்த் தட்டை நோக்கி
மெலிந்தெழுந்து
செவ்வாய் மொட்டு விரிக்க
 வண்டினமும் தேனீயும்
வாய் முத்திக் கிறங்கி
ரசம்பெற்றெழுந்து
விச்ராந்தியாய்
உச்சி மரத்தவமிருந்து தொங்க
இனிக்கும்
எச்சில்
விஷம்