Thursday, December 29, 2011

தவிர்க்க முடியாத எதேச்சை

சிக்னலுக்கு காத்திருக்கும்
பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் இருந்து
மிக அருகில் வந்து நிற்கும் அடுத்த பேருந்தின்
ஜன்னலோர பிரயாணியை பார்ப்பதும் -

நிலைக்கண்ணாடி ஒன்றினைக் கடக்கும்போது
தன் முழு பிம்பத்தை காண்பதோ
முடிக்கற்றையை சரிசெய்து கொள்வதோ -

வாசகம் பதித்த 
இறுக்கமான மேலுடையில்
கடந்து சென்ற பெண்ணின்
முகம் நினைவுக்கு வராததும் -

பின்னிரவு வேளையில்
பேருந்து நிலைய சுவரோரமாய்
தனியாக நிற்கும் பெண்ணின்
முகத்தை நேராக பார்க்க முயல்வதும் -

கொளுத்தும் வெய்யிலில்
கைக்குழந்தைப் பிச்சைக்காரியின்
குழந்தையைப் பார்க்காமல்
கைகளை மட்டும் பார்த்து காசு இடுவதும் -    


தவிர்க்க முடியாத எதேச்சைகளாவது

எல்லோருக்கும்தனா?   

 

 

 

1 comment:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தருணாங்கள் ஒரு டெம்ப்ளேட் போல ஆகிவிடுவது அழகாக வந்திருக்கிறது.

க்ளாஸ். யாரும் மறுக்காத எதேச்சையான தருணங்கள்.

வாழ்த்துக்கள் ரமேஷ்கல்யாண்.