Friday, December 16, 2011

ஒற்றைக்கதவு

ஆள் நடமாட்டமற்ற வெளியில்
லேசாகத் திறந்தபடி
மூடி இருக்கிறது
அந்த
ஓரறையின் ஒற்றைக்கதவு
ரகசியமொன்றின் கசிவைப் போல.

சந்தேகமே இல்லை

உள்ளிருக்கும் இருவர்
சந்தேகத்தைத் தவிர்க்க
அப்படி செய்திருக்கலாம்
சந்தேகச் சிறகுகள் முளைத்துக்கொள்ள

ஒரு சமயத்தில்
கதவு மிக மெதுவாக மூடப்பட
முளைத்த சிறகுகள் படபடத்தன
சற்று நேரத்திற்குப் பின்
அக் கதவு 
அகலமாய்த் திறந்து கொண்டது

அதேதான். சந்தேகமில்லை. 

அவ்விருவரும் வெளியே வரக்
காத்திருந்து -
பின்
சட்டென உள்நுழைந்து அவர்களுக்கு
அதிர்ச்சி தரலாம் என
சரேலென உள்நுழைந்தபோது
அதிர்ச்சியுடன்  வரவேற்றது
ஆட்களற்ற அறை

காற்றின் சூழ்ச்சி
         
   

2 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கிளர்வூட்டும் கவிதை ரமேஷ்கல்யாண்.

காற்றின் சூழ்ச்சியை நீக்கிவிடுங்கள்.இன்னும் நன்றாகவே இருக்கும்.

RAMESHKALYAN said...

அப்படியும் வைத்து மறுபடி வாசித்துப் பார்க்கிறேன்